Pages

Tuesday, May 14, 2013

அஸாத் சாலி இப்பொழுது பூனை போல் ஆகிவிட்டார் – பொதுபல சேனா!

Tuesday, May 14, 2013
இலங்கை::நாம் ஒருபோதும் நாடாளுமன்றம் செல்லமாட்டோம் என பொது பல சேன இன்று தெரிவித்தது.
 
நோர்வேயிடமிருந்தோ அல்லது வேறு எந்த நாட்டிலிருந்தாவது தாம் பணம் பெற்றதை வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச நிரூபித்தால் மக்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு இரண்டு மணித்தியாலங்களில் பொது பல சேனவை கலைத்துவிடுவோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
 
ஆனால் பொது பல சேன உருவாக்கப்படுவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன் வடக்கில் துன்புற்றுக் கொண்டிருந்த தமிழ் மக்களுக்கு உதவுவதற்காக நேர்வே சென்றதாக ஞானசர தேரர் தெரிவித்தார்.
 
இந்தியாவிலிந்து பௌத்த சமயத்தை முற்றாக அழித்துவிட விரும்பும் சிவசேன போன்ற இந்துத்துவ அமைப்புக்களுடன் அமைச்சர் விமலுக்கு தொடர்பு இருப்பதாக நம்புகின்றோம் என அவர் குறிப்பிட்டார்
கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலி விடுவிக்கப்பட்ட பின்னர் பூனை போல் ஆகிவிட்டார். முடியுமாயின் அவரை மீண்டும் கைது செய்ய வேண்டும் எனவும் அவர் கூறினார்.
 
நாட்டில் தற்போது கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இந்த பிரச்சினைகளை விரைவில் பிரஸ்தாபிக்கவுள்ளோம் எனவும் பொது பல சேன தெரிவித்தது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளார் மாநட்டிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.

No comments:

Post a Comment