Pages

Friday, May 3, 2013

முன்னாள் பிரதமர் ரஜீவ்காந்தியின் கொலை வழக்கில் கைதிகளாக தடுத்துவைக்கப்பட்டுள்ள,முருகன், சாந்தன், பேரரறிவாளன் ஆகியோரது மரண தண்டனையை, ஆயுள்தண்டனையாக குறைக்க : தி.மு.க. நாடாளுமன்றக் குழு மனு!

Friday, May 03, 2013
புதுதில்லி::முருகன், சாந்தன், பேரரறிவாளன் ஆகியோரது மரண தண்டனையை, ஆயுள்தண்டனையாக குறைக்க  மத்திய அரசு குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று கோரி திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி ஆர் பாலு தலைமையில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
 
அந்த மனுவில்:-
 
ஒவ்வொருநாளும், மரணதண்டனையை எதிர்நோக்கி, நான்கு சுவர்களுக்கிடையே கிட்டத்தட்ட அவர்களது பாதி ஆயுட்காலம் முடிந்து விட்டது. இந்த சிறைவாசம், மரணதண்டனையைவிட கொடுமையானது. மரணதண்டனை என்பது ஒரு சட்டபூர்வமான கொலை என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.ஜனநாயக மற்றும் நாகரிக சமுதாயத்தைக் கொண்ட நமது நாட்டில் மரணதண்டனைக்கு எந்த இடமும் இல்லை.
 
இதனை கருத்தில்கொண்டு, மகேந்திரநாத் தாஸ் மரணதண்டனை வழக்கில் அண்மையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, முருகன், சாந்தன் மற்றும் பேரரறிவாளன் ஆகியோரது மரணதண்டனை, மனிதாபிமான அடிப்படையில் ஆயுள்தண்டனையாகக் குறைக்கப்பட வேண்டும். 22 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாழக்கையை கழித்துவிட்ட இவர்களது தண்டனையை ஆயுள்தண்டனையாகக் குறைக்க மத்திய அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத்தலைவருக்கு அனுப்பவேண்டும என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment