Tuesday, May 14, 2013
இலங்கை::பாதுக்கை - அருக்வத்த பகுதியில் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் வேன் ரயிலுடன் மோதியதில் இருவர் பலி!
பாதுக்கை - அருக்வத்த பகுதியில் வேனொன்று ரயிலுடன் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் பாடசாலை மாணவர் ஒருவரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.
பாதுகாப்பற்ற ரயில் கடவையொன்றில் இன்று காலை 7 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினார்.



No comments:
Post a Comment