Pages

Tuesday, May 14, 2013

மக்கள் தொடர்புபாடல் அமைச்சர் மேர்வின் சில்வா நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஆஜரானார்!

Tuesday, May 14, 2013
இலங்கை::மக்கள் தொடர்புபாடல் அமைச்சர் மேர்வின் சில்வா நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஆஜரானார்.

1999 ஆம் ஆண்டு எப்பாவல தேர்தல் பிரசார கூட்டத்தின் மீது குண்டுவீசிய சம்பவம் தொடர்பில் சாட்சியளிப்பதற்கே அவர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

அந்த காலப்பகுதியில் அமைச்சர் மேர்வின் சில்வா ஐக்கிய தேசியக்கட்சியில் அங்கம் வகித்தார்.

இந்த வழக்கு, அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவர் சாட்சியளிப்பதற்காக நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு திரட்டும் வகையில் இந்த பிரசாரக்கூட்டம் நடைபெற்றது.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட குண்டுவீச்சு தாக்குதல் சம்பவத்திற்கு எதிராக எப்பாவலயைச் சேர்ந்த வசந்த என்பருக்கு எதிராக குற்றச்சாட்டப்பட்டது.

அந்த சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி உட்பட மூன்றுபேர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment