Pages

Wednesday, May 22, 2013

கிழக்கு மாகாண சபை அமர்வு ஒத்திவைப்பு; எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கண்டனப் போராட்டம்!.

Wednesday, May 22, 2013
இலங்கை::கிழக்கு மாகாண சபை அமர்வை சபையின் தவிசாளர் தன்னிச்சையாக பிற்போட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாகாண சபைக்கு முன்பாக எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
நேற்று (21ம் திகதி) செவ்வாய்க்கிழமை காலை சபை அமர்வு தவிசாளர் ஆரியவதி கலபதி தலைமையில் ஆரம்பமானபோது எதுவித காரணமும் இன்றி சபை அமர்வு அடுத்தமாதம் 18ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.
எதுவித காரணமும் இன்றி தன்னிச்சையாக தவிசாளர் மேற்கொண்ட அடாவடித்தன நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் நடத்தப்பட்டதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோ.கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.
 
இந்த போராட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கலந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
 மாகாணசபை அமர்வில் மீள்குடியேற்றம், மின்சார கட்டணம் அதிகரிப்பு உட்பட பல தனி நபர் பிரேரணைகள் சபையில் சமர்ப்பிக்கப்படவிருந்த நிலையில் திட்டமிட்ட வகையில் சபை பிற்போடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
 
தவிசாளர் ஆளும் தரப்பு கூட்டத்தை கூட்டி அவர்களுக்கிடையே கலந்தாலோசித்து தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் இதனை தமது கட்சி ஒருபோதும் அனுமதிக்காது எனவும் இதை எதிர்ப்பு தொடர்ச்சியாக போராட்டம் இடம்பெறும் எனவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment