Pages

Saturday, May 4, 2013

இலங்கை விஜயமானது மிகவும் முக்கியமாக அமைந்துள்ளது, சட்டவிரோதப் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்ந்தும் அவுஸ்திரேலியா செல்வதைத் தடுப்பது குறித்து இலங்கை அரசாங்கம் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை:பிரன்ட் ஓ கோனர்!

Saturday, May 04, 2013
இலங்கை::இலங்கையிலிருந்து சட்டவிரோதமாகப் படகுகள் மூலம் 
அவுஸ்திரேலியாவுக்குச் செல்பவர்களைத் தடுப்பதில் இலங்கை அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்கி வருவதாக அவுஸ்திரேலியாவின் குடிவரவு மற்றும் குடியுரிமை அமைச்சர் பிரன்டன் ஓ கோனர் தெரிவித்தார்.
 
சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியா வருவதைத் தடுப்பதற்கு பாலித் தீர்மானத்துக்கு அமைய பிராந்திய நாடுகளின் ஒத்துழைப்பைப் பெற்று வருவதாகவும், இலங்கையுடன் தொடர்ந்தும் ஒத்துழைப்புடன் செயற்பட விருப்பதாகவும் அவர் கூறினார்.
 
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் அவுஸ்திரேலியாவின் குடிவரவு மற்றும் குடியுரிமை அமைச்சர் பிரன்ட் ஓ கோனர், நேற்று கொழும்பு சினமன்ட் கிரான்ட் ஹோட்டலில் ஊடகவியலாளர் சந்திப் பொன்றை நடத்தியிருந்தார்.
இலங்கை விஜயமானது மிகவும் முக்கியமாக அமைந்துள்ளது என்றும், சட்டவிரோதப் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்ந்தும் அவுஸ்திரேலியா செல்வதைத் தடுப்பது குறித்து இலங்கை அரசாங்கம் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக அவர் கூறினார்.
 
அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
 
பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என பலர் தமது உயிர்களை பணயம் வைத்து, வீணாகப் பணத்தை செலவழித்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா வருவதையும், கடல் அனர்த்தங்களில் அவர்கள் உயிர்களை விடுவதையும் பார்க்க நாம் விரும்பவில்லை. எனவேதான், ஆட்கடத்தல் குற்றச்செயல்களைத் தடுப்பதற்கு எமது அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
 
இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்பு எமக்குக் கிடைத்துள்ளது. சட்டவிரோதப் புகலிடக்கோரிக்கையாளர் விடயத்தில் காணப்படும் சவால்களை இணைந்து எதிர்கொள்வதற்கு இலங்கையும், அவுஸ்திரேலியாவும் தயாராகவுள்ளது.
 
கடந்த வருடத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்பட்டது. எனினும், சட்டவிரோதப் புகலிடக் கோரிக்கையாளர்களை அவர்களின் சொந்த நாட்டுக்குத் திருப்பியனுப்ப நடவடிக்கை எடுத்த பின்னர் அந்த எண்ணிக்கை கணிசமானளவு குறைந்துள்ளது.
 
சட்டவிரோதப் புகலிடக் கோரிக்கையாளர்களை முற்றாகத் தடுத்து நிறுத்துவதற்கு பிராந்திய நாடுகளின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொண்டுள்ளோம்.
 
அவுஸ்திரேலியாவுக்குச் சட்டவிரோதமாக நுழைபவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்ற தெளிவான செய்தியையும் நாம் கூறிக்கொள்கின்றோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அவுஸ்திரேலிய குடிவரவு மற்றும் குடியுரிமை அமைச்சருடன், அந்நாட்டின் குடிவரவு மற்றும் குடியுரிமைத் திணைக்களத்தின் செயலாளர் மார்ட்டின் பவல்ஸ¤ம் இலங்கை வந்துள்ளார்.

No comments:

Post a Comment