Pages

Saturday, May 4, 2013

இணையத்தின் ஊடாக 247 மில்லியன் ரூபா கடனட்டை மோசடி: 9 கைது!

Saturday, May 04, 2013
இலங்கை::இணையத்தின் ஊடாக 247 மில்லியன் ரூபா கடனட்டை மோசடியில் ஈடுபட்ட ஒன்பது பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரசாங்க வங்கியொன்றில் இந்த கடனட்டை மோசடி இடம்பெற்றுள்ளது.
 
கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பேர் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், ஏனைய ஏழு பேரும் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் மே மாதம் 15ம் திகதி வரையில் குறித்த நபர்களை விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டே நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.
 
மோசடி செய்யப்பட்ட பணம் இரண்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கணக்குகளில் வைப்புச் செய்யப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
 

No comments:

Post a Comment