Tuesday, May 21, 2013
இலங்கை::இலங்கைக்கு தொடர்ச்சியாக நிதி உதவிகள் வழங்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. எவ்வளவு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது அறிவிக்கப்படாத போதிலும், நித உதவிகள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டைப் போன்றே நிதி உதவிகள் வழங்கப்பட உள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கைப் பிரதிநிதி பெர்னாட் செவாஜ் தெரிவித்துள்ளார். 2005ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் இலங்கைக்கு 587 மில்லியன் யூரோ நிதி உதவிகளை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்திருந்தது.
மனிதாபிமான மற்றும் அபிவிருத்தி உதவிகளாக இந்த உதவிகள் வழங்கப்படவுள்ளது. இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு சிறந்த சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்

No comments:
Post a Comment