Monday, May 20, 2013

இந்தியாவில் பிரிவினையை தூண்டும் விதமாக தடையை மீறி கூட்டம் நடத்திய சீமான் : கைது செய்ய போலீஸ் தீவிரம்!

Monday, May 20, 2013
கடலூர்::தடையை மீறி கடலூரில் கூட்டம் நடத்தி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளார் சீமான் உள்ளிட்ட மூன்று பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனால் சீமான் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம என்ற சூழல் உருவாகியுள்ளது.

மே 18ஆம் தேதியன்று கடலூரில் இன எழுச்சிக் கருத்தரங்கம், பேரணி, பொதுக்கூட்டம் நடத்த போவதாக நாம் தமிழர் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. பொதுக் கூட்டம் நடத்த சில நிபந்தனைகளை விதித்தது. அந்த நிபந்தனைகளை மீறி தடை செய்யப்பட்ட இயக்க தலைவர் பிரபாகரன் படம் போட்டு டிஜிட்டல் பேனர்களை நாம் தமிழர் கட்சியினர் வைத்ததால் பொதுக் கூட்டத்துக்கு போலீசார் தடை விதித்தனர். இதையடுத்து கருத்தரங்கம் மட்டும் கடலூர் டி.வி.எம். திருமண மண்டபத்தில் மே 18ஆம் தேதி (சனிக்கிழமை) காலையில் நடந்தது.

ஆனால் இந்த கருத்தரங்கத்தை தொடர்ந்து இரவு பொதுக் கூட்டமும் இதே மண்டபத்தில் நடத்தப்பட்டது. இதில் அனுமதிக்கப்பட்ட நேரமான இரவு 10 மணியை கடந்து இரவு 10.20 மணி வரை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். இந்நிலையில் நேற்று கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன் ஒரு புகார் மனு அளித்தார். அதில், தடையை மீறி சீமான், நாம் தமிழர் கட்சி மாவட்ட பொறுப்பாளர் கடல்தீபன், ஒலி, ஒளி அமைப்பு உரிமையாளர் ஆகியோர் கடலூர் டி.வி.எம். மகாலில் நாம் தமிழர் கட்சியினரை ஒன்று கூட்டி கலைநிகழ்ச்சி, நாடகம், கருத்தரங்கம் என்ற பெயரில் ஒலிப்பெருக்கி மூலம் அதிக சத்தம் ஏற்படுத்தியும், போக்குவரத்துக்கு இடைஞ்சலாக வாகனத்தை நிறுத்தியும், 30/2 போலீஸ் சட்டம் நிலுவையில் உள்ள போது இரவு 10 மணிக்கு மேல் 10.20 மணி வரை தொடர்ந்து பொது ஜன அமைதிக்கு குந்தகம், பங்கம் விளைவித்தார்கள் என்று கூறியுள்ளார்.

அதன்பேரில் சீமான், கடல்தீபன், சவுண்ட் சர்வீஸ் ஒலி, ஒளி அமைப்பு உரிமையாளர் ஆகிய 3 பேர் மீது திருப்பாதிரி புலியூர் போலீசார் 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சீமான் உள்பட 3 பேரை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
 
நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்: சீமானை கைது செய்ய டி.ஜி.பி.யிடம் மனு!
 
சென்னை::இந்து மக்கள் கட்சியின் சென்னை மண்டல தலைவர் முத்து ரமேஷ்குமார் டி.ஜி.பி. அலுவலகத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

கடந்த 18-ந்தேதியன்று கடலூரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் இந்தியாவில் பிரிவினையை தூண்டும் விதமாக காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் பேசி உள்ளார். தீவிரவாதி அப்சல்குரு தூக்கிலிடப்பட்டதை கண்டித்து ஹபீஸ் சையது என்ற தீவிரவாதியுடன் இணைந்து இஸ்லாமாபாத்தில் போராட்டம் நடத்தியவர்தான் இந்த யாசின் மாலிக்.

இவ்வாறு இந்தியாவுக்கு எதிராக செயல்படும் தீவிரவாதிகளுடன் கைகோர்த்துள்ள அவர் தமிழகத்தில் பிரிவினையை தூண்டும் வகையில் பேசி உள்ளார்.
 
எனவே அவர் மீது சட்டப் படி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழர் பிரச்சினையில் பின்னடைவு ஏற்படுத்தும் வகையிலும் தமிழகத்தில் பிரிவினை சக்தியை உருவாக்க முயற்சி செய்யும் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
tamil matrimony_INNER_468x60.gif
 
 
 

No comments:

Post a Comment