Monday, May 20, 2013

நாட்டின் கிழக்குக் கடற்பரப்பில் விபத்துக்குள்ளான படகிலிருந்து காப்பாற்றப்பட்ட பங்களாதேஷ் பிரஜைகள் 61 பேர் நாடு திரும்பினர்!

Monday, May 20, 2013
இலங்கை::நாட்டின் கிழக்குக் கடற்பரப்பில் விபத்துக்குள்ளான படகிலிருந்து காப்பாற்றப்பட்ட பங்களாதேஷ் பிரஜைகள் 61 பேர் நேற்று நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
 
இந்தக் குழுவினரில் 60 ஆண்களும் பெண்ணொருவரும் அடங்குவதாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் குடிவரவு, குடியகல்வு பிரிவின் உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
 
கடந்த பெப்ரவரி மாதம் ஒலுவில் மீன்பிடி துறைமுகத்துக்கு அருகிலிருந்து இந்தக் குழுவினர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்டதன் பின்னர் அவர்கள் பூசா மற்றும் மிரிஹான தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்ததாக குடிவரவு குடியகல்வு பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
மலேசியா அல்லது வேறொரு நாட்டிற்கு பயணித்துக் கொண்டிருந்த படகொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.

No comments:

Post a Comment