Pages

Wednesday, May 15, 2013

வடக்கு தேர்தலை மட்டும் செப்டெம்பர் மாதம் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன!

Wednesday, May 15, 2013
இலங்கை::வடக்கு,வடமேல் மற்றும் மத்திய ஆகிய மூன்று மாகாண சபைகளுக்கும் ஒரேநாளில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வடக்கு தேர்தலை மட்டும் செப்டெம்பர் மாதம் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதலமைச்சர்களின் வேண்டுகோள்களின் அடிப்படையில் பதவிக்காலம் முடிவதற்கு ஒருவருடத்திற்கு முன்பதாகவே வடமேல் மற்றும் மத்திய ஆகிய இரு மாகாண சபைகளை கலைப்பதற்கு ஆளுநர்கள் நடவடிக்கைகளை எடுப்பர் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆயினும், மாகாணசபைத்தேர்தல் சட்டத்தின்பிரகாரம் ஜனாதிபதியின் கட்டளைக்கு பின்னரே வடமாகாணசபைத்தேர்தலை நடத்தமுடியும் அதற்கான உத்தியோகபூர்வ அறிவித்தலை ஜனாதிபதி அடுத்தமாதம் முற்பகுதியில் தேர்தல்கள் ஆணையாருக்கு உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என்று அரச தரப்பு வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

அவ்வாறான உத்தியோகபூர்வ அறிவித்தல் விடுக்கப்பட்டதன் பின்னர் செப்டெம்பர் முதல் வாரத்தில் வட மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ஏனைய இருமாகாண சபைகளின் தேர்தல்களையும் வடமாகாண சபை தேர்தலுக்கு பின்னரே நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment