Pages

Wednesday, May 15, 2013

25 வருடங்களுக்குப் பின் வடக்கையும், தெற்கையும் இணைத்து அனுராத புரத்திலிருந்து மதவாச்சி ஊடாக மடு வரையிலான ரயில்: 85 வீதமான வெளிநாட்டுக் கடன்கள் வடக்கிற்காகவே செலவிடப்பட்டுள்ளன – பசில் ராஜபக்ஷ!

Wednesday, May 15, 2013
இலங்கை::25 வருடங்களுக்குப் பின் வடக்கையும், தெற்கையும் இணைத்து அனுராத புரத்திலிருந்து மதவாச்சி ஊடாக மடு வரையிலான ரயில் பாதையைத் திற ப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய் ந்த நிகழ்வாகுமென பொருளாதார அபி விருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புலிப் பயங்கரவாதி களிடமிருந்து நாடு மீட்கப்பட்ட பின் னர் உதயமான சமாதானமும் அதன் மூலம் உருவான அபிவிருத்தியும் சகல இலங்கையர்களுக்கும் எவ்வித பேத மும் இன்றி உரித்தாவதாகவும் அது முழு உலகுக்கும் முக்கிய நிகழ்வாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
 
அனுராதபுர ரயில் நிலையத்தி லிருந்து நேற்றுக் காலை 9.48 மணிக்கு புறப்பட்ட மங்கள ரயில் மதவாச்சியைக் கடந்து மடு ரயில் நிலையத்தை 10.48க்கு அடைந்தது.
 
போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம, இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா உட்பட பிரமுகர்களை ஏற்றிச் சென்ற முதல் ரயிலின் பிரயாணம் ஆரம்ப முதல் இறுதி வரை மகா சங்கத்தினர் பிரித் ஓதினர்.
அதன்பின் மடு ரயில் நிலையம் திறக் கப்பட்டது. மதவாச்சி முதல் மடு வரை 43 கிலோ மீற்றர் சிறப்பாக நெறிப் படுத்தப்பட்டு நவீன மயப்படுத்தப்பட்டி ருந்தது. மக்கள் இரு மருங்கிலும் கூடி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
 
அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இங்கு தொடர்ந்து கூறியதாவது,
இது 25 வருடங்களுக்கு பின்னர் நாட்டு மக்களுக்குக் கிடைத்த பெரும் விருந்தாகும். எமது நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் மகத்தான வேலைத் திட்டம் இது.படை வீரர்கள் உயிர்த்தியாகம் செய்து நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்ததால் இது கிடைத்தது. இந்திய அரசின் உதவியும் எமக்குக் கிடைத்தது.
 
மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோரை மீண்டும் சொந்தக் கிராமங்களில் மீள்குடி யேற்றியுள்ளோம். அது மிகவும் கஷ்டமான காரியமாகும். எவரையும் அகதி முகாம்களில் வைக்க நாம் இடமளிக்கவில்லை.
வடக்கில் ஒரு பாடசாலையோ, ஒரு ஆஸ்பத்திரியோ மூடப்படவில்லை. முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா ஆஸ்பத்திரிகள் முன்னேறியுள்ளன. சகல ஆஸ்பத்திரிகளுக்கும் வைத்திய நிபுணர் களுடன் ஆளணியினரையும், மருத்துவ உபகரணங்களையும் வழங்கியுள்ளோம்.
 
வேற்றுமைகள் இன்றியே இந்த வளங் களை நாம் வழங்கினோம். ஜெனீவா சென்று நாட்டுக்கு எதிராக கருத்து தெரி விப்போர் இந்த மக்களுக்கு கிடைத்துள்ள சுதந்திரம், அபிவிருத்தி பற்றியும் கருத்து கூற வேண்டுமென கேட்கிறேன் என்றார்.
 
போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம கூறியதாவது,
புலிகளிடமிருந்து ஜனாதிபதி நாட்டைப் பாதுகாத்தார். அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்கிறார் என்றார்.
அமைச்சர்களான ரிசாட் பதியுதீன், டக்ளஸ் தேவானந்தா, இந்திய உயர்ஸ் தானிகர் அசோக் கே. காந்தா, ரயில்வே பொதுமுகாமையாளர் பீ. ஏ. பீ. ஆரியரத்ன ஆகியோரும் உரை நிகழ்த்திய இந்த வைபவத்தில் மதத் தலைவர்களும் சமுகமளித்து ஆசீர்வாதம் வழங்கினர்.
 
85 வீதமான வெளிநாட்டுக் கடன்கள் வடக்கிற்காகவே செலவிடப்பட்டுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களை மீள் குடியேற்றவும், வட மாகாண அபிவிருத்திப் பணிகளுக்குமே 85 வீதமான வெளிநாட்டுக் கடன்கள் பயன்படுத்தப்பட்டன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment