Pages

Friday, May 24, 2013

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: 3 ராணுவ வீரர்கள் பலி!

Friday, May 24, 2013
காஷ்மீர்::ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலின் பேரில் பாதுகாப்புப் படையினர் ஜம்மு காஷ்மீரின் பல பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று நடந்த தேடுதல் வேட்டையின் போது லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் கமாண்டர் ஹிலால் மவுல்வி சுட்டு கொல்லப்பட்டார்.  போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 3 போலீசார் காயமடைந்தனர்.

இந்த நிலையில், இன்று காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம், டிரால் பகுதியில் இந்திய ராணுவ வீரர்களுக்கும் தீவிரவாதிகளுக்குமிடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. 

அப்போது, புச்சோ என்ற கிராமத்தில் தீவிரவாதிகள் நடத்திய எதிர் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் குண்டு பாய்ந்து உயிரிழந்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment