Thursday, May 16, 2013
இலங்கை::28 ஆண்டுகளுக்கு முன்னதாக 146 அப்பாவிகள் ஸ்ரீமஹாபோதி விஹாரைப் பகுதியில் மிகக் கொடூரமான முறையில் புலிபயங்கரவாதிகளினால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து எவரும் குரல் எழுப்பவில்லை: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!
அனுராதபுரத்தில் இடம்பெற்ற பாரிய மனித படுகொலைச் சம்பவம் குறித்து எந்தவொரு மனித உரிமை அமைப்பும் குரல் கொடுக்கவில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 28 ஆண்டுகளுக்கு முன்னதாக 146 அப்பாவிகள் ஸ்ரீமஹாபோதி விஹாரைப் பகுதியில் மிகக் கொடூரமான முறையில் பயங்கரவாதிகளினால் படுகொலை செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் படுகொலைச் சம்பவம் குறித்து எந்தவொரு அமைப்பும் குரல் எழுப்பவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொதுநலவாய நாடுகள் உள்ளுராட்சி மன்றப் பேரவை அமர்வுகளின் பிரதம உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உகண்டாவின் தலைநகர் கம்பலாவில் இந்த அமர்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
நிரந்தர சமாதானம் மற்றும் அரசி யல் ஸ்திரத்தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே பொரு ளாதார, சமூக அபிவிருத்திக்கான வழிகள் திறக்கப்பட்டுள்ளன என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.
உகண் டாவின் கம்பாலா நகரில் நடைபெற்ற பொது நலவாய நாடுகளின் உள்ளூ ராட்சி மாநாட்டில் சிறப்புரையாற் றிய ஜனாதிபதி, பயங்கரவாதத்தின் முதல் இலக்கே உள்ளூராட்சி நிர்வாகம்தான் எனவும் தெரி வித்துள்ளார். பயங்கரவாதத்திற்கு முதலில் பலியாகியது வடக்கு எனவும் யாழ்ப்பாண மாநகர முதல்வரே அதற்கு முதலில் பலியானவர் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
உகண்டாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உகண்டாவின் கம்பாலா நகரில் நடைபெற்ற பொது நலவாய நாடுகளின் உள்ளூராட்சி மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். செயற்பாட்டு ஜனநாயகத்தின் முன்னுதாரணமும் எதிர்பார்ப்பும் மிகவும் வினைத்திறனுடன் வெளிப்படுவது உள்ளூராட்சி நிர்வாகம் மூலமே என்பதை இலங்கையர்களான நாம் தொடர்ந்தும் நம்புகிறோம்” என ஜனாதிபதி தமதுரையில் தெரிவித்துள்ளார். கி.பி. 4 வது தசாப்தம் தொடங்கி இலங்கையில் நடைமுறையிலிருந்து வரும் உள்ளூராட்சி நிர்வாகத்தின் பரிணாமம் தொடர்பில் ஜனாதிபதி இங்கு தெளிவுபடுத்தியுள்ளார்.
இலங்கை பெற்றுக் கொண்டுள்ள வரலாற்று அனுபவங்கள் தொடர்பில் விடயங்களை முன்வைத்துள்ள ஜனாதிபதி அவர்கள், அபிவிருத்தியை மக்கள் மத்தியில் நேரடியாக முன்னெடுத்துச் செல்கையில் உள்ளூராட்சிச் சபைகள் அதற்கு வினைத்திறனாக அமைந்தது மட்டுமன்றி இது மிகவும் செயற்திறன் மிக்கதாகவும் அமைந்தது. அபிவிருத்தியின் பிரதிபலன்கள் பகிர்ந்து செல்வதற்கும் சமூகங்களின் பங்களிப்பை உறுதிப்படுத்துவதற்கும் அரசாங்கத்தின் தலையீடு அவசியமாகிறது என்பதே நம்பிக்கை. ஜயஸ்ரீ மகாபோதிக்கு அருகில் புலிபயங்கரவாதிகளால் அப்பாவிப் பொது மக்கள் 146 பேர் 28 வருடங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்டது இது போன்றதொரு தினத்தில்தான். அத்தகைய படுகொலைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கு அன்று எந்தவொரு மனித உரிமை அமைப்பும் முன்வரவில்லை.
பயங்கரவாதத்தின் முதலாவது இலக்கே உள்ளூராட்சி நிர்வாகம்தான். யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் இலங்கையில் உள்ளூராட்சி நிர்வாகமும் பொருளாதார மேம்பாட்டுக்கு உச்ச அளவு பங்களிப்பு செய்துள்ளது. புலிபயங்கரவாதத்திற்கு முதலில் பலியாகியது வட மாகாணமே, யாழ்ப்பாண மாநகர முதல்வரே முதலில் அதற்குப் பலியாகியவர். நிரந்தர சமாதானம் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை ஆகிய இரண்டையும் அடிப்படையாகக் கொண்டே பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கான வழிகள் திறக்கப்பட்டுள்ளன எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மேற்படி மாநாட்டில் ஆரம்ப உரையை நிகழ்த்திய உகண்டா ஜனாதிபதி யோவேரி முஸவேனி; பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளமைக்காக இலங்கையைப் பாராட்டியுள்ளார். கொழும்பில் இவ்வருடம் நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள பொது நலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டிற்கு உகண்டா தயாராகி வருவதாகவும் உகண்டா இந்த மாநாட்டில் பங்கேற்கும் எனத் தெரிவித்த உகண்டா ஜனாதிபதி, அமைதியை உருவாக்கியுள்ளமைக்காக இலங்கை மக்களைப் பாராட்டியுள்ளார்.
இதேவேளை, பிரஜைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக பொது நலவாய நாடுகளின் உள்ளூராட்சி நிர்வாகம் அமைய வேண்டும். ஜனநாயகத்திற்கு காத்திரமான பங்களிப்பை வழங்க வேண்டும் என செய்மதி மூலம் உரையாற்றியுள்ள பொது நலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment