Thursday, May 16, 2013

கள்ளக் காதல் முரண்பாடு இன மோதலாக மாறியது: தங்காலை, மரியாவத்தை தமிழ் கிராமத்திற்குள் புகுந்து ஒருவரை வெட்டி, 15 தமிழர்களுடைய வீடுகளையும் ஒரு சிங்களவருடைய வீட்டையும் சேதம் விளைவித்த சம்பவத்துடன் தொடர்புடைய எட்டு சந்தேக நபர்கள் கைது!

Thursday, May 16, 2013
இலங்கை::தங்காலை, மரியாவத்தை தமிழ் கிரா மத்திற்குள் புகுந்து ஒருவரை வெட்டி, 16 வீடுகளுக்கு சேதம் விளைவித்த சம்பவத்துடன் தொடர்புடைய எட்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ள தாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கிறது. இந்தத் தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் தங்காலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ள்ளனர்.

 இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் புத்திக சிறிவர்தன மேலும் தகவல் தருகையில்:- தங்காலை, பொது மயான வளாகத்திற்கு அருகிலுள்ள மரியாவத்தை தமிழ் கிராமத்திற்குள் புகுந்த சிங்கள நபர் ஒருவர் அங்கிருந்த நபர் ஒருவரை வெட்டிக் குத்தி காயப்படுத்தியுள்ளதுடன், அந்த கிராமத்திலுள்ள 15 தமிழர்களுடைய வீடுகளையும் ஒரு சிங்களவருடைய வீட்டையும் அடித்து நொருக்கி சேதப்படுத்தியுள்ளார். 

 இந்த தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளதுடன் வீட்டின் யன்னல்கள் உடைக்கப்பட்டுள்ளது. அத்துடன் மூன்று வீடுகளின் பொருட்களும், சொத்துக்களும் சேதமாக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தங்காலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலினை அடுத்து விசாரணைகளை மேற்கொண்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 8 பேரை கைது செய்துள்ளனர்.
 
 தமிழ் கிராமத்திலுள்ள பெண் ஒருவருக்கும் சிங்கள கிராமத்திலுள்ள ஒருவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. குறித்த பெண்ணின் மகன் சம்பந்தப்பட்ட நபரை கடந்த 12ம் திகதி கத்தியால் வெட்டி காயப்படுத்தியுள்ளார். இதன் பலிவாங்கல் நடவடிக்கையாகவே இந்த தாக்குதல் சம்பவம் இடம் பெற்றுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணை களிலிருந்து தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment