Pages

Friday, May 24, 2013

காரைக்கால் மீனவர்கள் 26 பேர் இன்று வீடு திரும்புகிறார்கள்!

Friday, May 24, 2013
காரைக்கால்::காரைக்கால் மீனவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் 5-ந் தேதி மீன் பிடித்துக் கொண்டிருந்த போது சிங்கள
படையினர் 26 மீனவர்கள் மற்றும் 5 விசை படகுகளையும் சிறை பிடித்து யாழ்பாணம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 
 
இந்த மீனவர்களை விடுவிக்க கோரி காரைக்கால் மீனவர்கள் ரெயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். மேலும் அடுத்த கட்டமாக சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்திருந்தனர். 
 
இந்த நிலையில் இலங்கை சிறையில் இருந்த 26 காரைக்கால் மீனவர்கள் விடுவிக்கப்பட்டு ராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர். 
இரண்டு நாட்கள் கடலில் சீற்றம் இருந்ததால் மீனவர்கள் ஊர் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. நேற்று 26 காரைக்கால் மீனவர்களும் இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். 
 
இதையடுத்து காரைக்கால் மீனவர்கள் இன்று(24-ந் தேதி)  வீடு திரும்கிறார்கள். 
மீனவர்கள் விடுதலை குறித்து மீனவ பஞ்சாயத்தார் கூறுகையில், மீனவர்கள் விடுதலைக்கு நடவடிக்கை எடுத்த மத்திய-மாநில அரசுகளுக்கும், ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கும், வர்த்தகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்தனர்.

No comments:

Post a Comment