Pages

Friday, May 3, 2013

புலிகள் இயக்கத்தின் யாழ். மாவட்டத் தலைவர்கள் எனக் கூறி 12 இலட்சம் ரூபாவினைக் கப்பமாகப் பெற்ற இருவர் கைது பெண் கொள்ளை கோஷ்டி கைது!:-5 வயது சிறுமியை பாலியல்: 59 வயது முதியவர் கைது!

Friday, May 03, 2013
இலங்கை::புலிகள் இயக்கத்தின் யாழ். மாவட்டத் தலைவர்கள் எனக் கூறி 12 இலட்சம் ரூபாவினைக் கப்பமாகப் பெற்ற இருவரை கைது செய்துள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சி, பரந்தன் சந்திப் பகுதியில் நேற்று இரவு 7.30 மணியளவில் யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தலைமையிலான விஷேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் திருநகர் மேற்கு, கிளிநொச்சி மற்றும் குருக்கள் வீதி, கோப்பாய் பகுதியைச் சேர்ந்;தவர்களாவர்.

இருவரும் யாழ். பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் விசாரணை பின்னர் யாழ். நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் யாழ். பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
 
பெண் கொள்ளை கோஷ்டி கைது!
 
தெஹியோவிட்ட கீரியாகொல்லே பகுதிகளில் வீடுகளை உடைத்து சுமார் ஆறு இலட்சம் ரூபாய் பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்ததாக கூறப்படும் எட்டுபேரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
அந்த கொள்ளை கோஷ்டியினர் பயன்படுத்திய வாகனத்தையும் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்த பொலிஸார் அந்த கொள்ளைக்கோஷ்டியில் ஐந்து பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
புலிகள் இயக்கத்தின் யாழ். மாவட்டத் தலைவர்கள் எனக் கூறி 12 இலட்சம் ரூபாவினைக் கப்பமாகப் பெற்ற இருவர் கைது!
 
வயதுச் சிறுமியைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 59 வயதுடைய முதியவர் கைது!
 
யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டப்பிராயில் 5 வயதுச் சிறுமியைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 59 வயதுடைய முதியவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். சிரோஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிப்ரி தெரிவித்துள்ளார்.

யாழ். பொலிஸ் தலமையகத்தில் இன்று  நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறித்த 5 வயதுச் சிறுமியை பற்றை ஒன்றுக்குள் அழைத்துச் சென்று முதியவர் அவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.

குறித்த சிறுமி வைத்தியசாலையில் மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்துடன் விநாயகர் வீதி கொக்குவிலைச் சேர்ந்த 59 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே கைது செய்யப்பட்டு யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் எதிர்வரும் மே 10ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment