Tuesday, March 5, 2013

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து தூத்துக்குடி மீனவர்கள் வேலை நிறுத்தம்!:-இலங்கை அதிபர் ராஜபட்சேவைக் கண்டித்து சிதம்பரம் பல்கலை மாணவர்கள் ரயில்மறியல்!

Tuesday, March 05, 2013
சென்னை::இலங்கை கடற்படையால் கைது, தூத்துக்குடி மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து மீனவர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த வாரம் கடலில் மீன்பிடிக்கச் சென்ற தூத்துக்குடியை சேர்ந்த மீனவர்கள், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 16 மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்கக் கோரி தூத்துக்குடி, சருவைக்குளம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள், இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், 500க்கும் மேற்பட்ட விசைப் படகுகள், நாட்டுப் படகுகள் கடலுக்குச் செல்லாமல், கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை அதிபர் ராஜபட்சேவைக் கண்டித்து சிதம்பரம் பல்கலை மாணவர்கள் ரயில்மறியல்!

சிதம்பரம்::இலங்கை அதிபர் ராஜபட்சேவைக் கண்டித்து, அண்ணாமலை பல்கலைக் கழக பொறியியல் புலம் மாணவர்கள் இன்று வகுப்புகளைப் புறக்கணித்து ரயில் மறியலில் ஈடுபட்டனர். சிதம்பரம் ரயில் நிலையத்தில் சோழன் விரைவு வண்டியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப் பட்டனர். இதனால் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது.

No comments:

Post a Comment