Tuesday, March 05, 2013
இலங்கை::இலங்கைக்கும் மாலைத்தீவிற்கும் ஹெரோய்ன் போதைப்பொருளை விநியோகித்த வெளிநாட்டவர்கள் இருவர் உள்ளிட்ட நால்வர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மஹரகம மற்றும் ஹோமாகம ஆகிய பகுதிகளில் இவர்கள் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சந்தேகநபர்களான வெளிநாட்டவர்கள் இந்தியாவிலிருந்து ஹெரோயினைக் கொண்டு வந்து இலங்கையிலும் மாலைத்தீவிலும் விநியோகித்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
21 மற்றும் 22 வயதான வெளிநாட்டவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து 90 கிராம் நிறையுடைய ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது

No comments:
Post a Comment