Pages

Tuesday, March 5, 2013

இலங்கை படுகொலைக்கு தமிழக கட்சிகளே காரணம் : காங்., தலைவர் கண்டுபிடிப்பு!

Tuesday, March 05, 2013
வத்தலக்குண்டு::இலங்கை இனப்படுகொலைக்கு தமிழக அரசியல் கட்சிகளே காரணம். தமிழகத்தில் உள்ளவர்களை கவனிக்காமல், இலங்கை தமிழர் குறித்து கவலைப்படுகின்றனர்,'' என, காங்., விவசாய அணி மாநில தலைவர் பவன்குமார் கூறினார்.

திண்டுக்கல் வத்தலக்குண்டில் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடந்தது. பவன்குமார் பேசியதாவது: இலங்கை இனப்படுகொலைக்கு தமிழக அரசியல் கட்சிகளே காரணம். தமிழகத்தில் உள்ளவர்களை கவனிக்காமல், இலங்கை தமிழர் குறித்து கவலைப்படுகின்றனர். காங்., கட்சி இலங்கை தமிழர் மறுவாழ்விற்கு 5 ஆயிரம் கோடி கொடுத்தது. தமிழகத்தில் லஞ்சம் அதிகரித்து விட்டது. லஞ்சத்திற்கு எதிரான "லோக் அயூக்தா'வை கொண்டுவர, தமிழக அரசு தடையாக உள்ளது. தி.மு.க., தலைவர் கருணாநிதி நடத்தும் டெசோ கருத்தரங்கு அர்த்தமற்றது. தமிழகத்தில் நீர் ஆதாரங்களை வளப்படுத்தி இருந்தால், காவிரி நீரை தேக்கி வைக்க முடியும். கர்நாடகாவிடம் கையேந்த தேவையில்லை, என்றார்.

No comments:

Post a Comment