Saturday, March 09, 2013
புதுடில்லி::இலங்கை தமிழர் பிரச்னையில் இந்தியா உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி 14 லட்சம் இந்தியர்களின் ஆதரடன் அம்னெஸ்டி அமைப்பு மனு அளித்துள்ளது. டில்லியில் மத்திய இணையமைச்சர் நாராயணசாமியிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவில் இலங்கையில் நீதியை நிலைநாட்ட பிரதமர் தலையிட வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டது.
மீனவர் புகாருக்கு இலங்கை மறுப்பு!
சென்னை::கோடியக்கரை அருகே தாக்கியதாக மீனவர்கள் கூறியதை இலங்கை மறுத்துள்ளது. இது குறித்து சென்னையில் உள்ள இலங்கை துணைத்தூதரகம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், மீனவர் புகார் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், இலங்கை கடற்படை இந்திய எல்லைக்குள்நுழைய வில்லை எனவும், மீனவர்களை தாக்கவோ, துப்பாக்கிச்சூடு நடத்தவோ இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment