Pages

Thursday, March 7, 2013

யுத்தம் முடிவுற்றதிலிருந்து இலங்கை ஆக்கபூர்வமாக செயற்படுகின்றது - பாங் கீ மூன்!

Thursday, March 07, 2013
UN::இலங்கையில் நிலவிய பயங்கரவாத யுத்தம் முடிவுற்றதிலிருந்து இலங்கை அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக ஐக்கியநாடுகளின் செயலாளர் நாயகம் பாங் கீ மூன் பத்திரிகையாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதில் அளிக்கும்போது தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், “கடந்தவாரம் நான் நிவ்யோக்கில் இருந்தபோது ஜப்பானிய தூதுவரைச் சந்தித்தேன். அவர் சென்ற வருடம் டிசம்பர் மாதம் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட கண்கானிப்பு பணியில் பங்களதேஸ், நைஜீரியா, ருமேனியா, இலங்கை போன்ற நாடுகளின் பிரதிநிதிகளும் கொலம்பிய பல்கலைக்கழக பேராசிரியர்களும் பங்கு கொண்ட குழுவுக்கு தலைமை தாங்கியிருந்தார்” எனவும் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் இலங்கையானது தேசிய நல்லிணக்கத்தை அடைவதற்காக உண்மையானதும் விரிவானதுமான செயல் முறையில் ஈடுபட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.

இதன் பொது, சர்வதேச சமூகத்துடன் சேரந்து இலங்கை செயற்படவேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் தெளிவுபடுத்தினார்

No comments:

Post a Comment