Tuesday, March 12, 2013
இலங்கை::வடபகுதி மக்களின் சமூகப் பிரச்சினைகளை தீர்த்துவைப்பதில் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் படையணி இன்று மகத்தான சேவையை செய்து வருகின்றது. எல். ரி. ரி. ஈ. பயங்கரவாத இயக்கத்தில் பலவந்தமாக சேர்த்துக் கொள்ளப்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ அவர்களின் சிறந்த ஆளுமைத்திறன் மூலம் இன்று சுதந்திரப் பறவைகளாக சமூகத்தில் இணைந்து கொண்டுள்ளார்கள்.
யுத்தம் முடிவடைந்தவுடன் இவர்கள் அனைவரும் இராணுவத்திடம் சரணடைந்து எங்கள் துன்பத்தை துடைத்தவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் என்பதை ஏற்றுக்கொண்டு, தாங்கள் கடந்த காலத்தில் செய்த சில தேசத்துரோக செயற்பாடுகள் குறித்து மனம் வருந்தி மன்னிப்புக்கேட்டதை அடுத்து இவர்கள் அனைவருக்கும் புனர்வாழ்வு அளித்த பின்னர் விடுவிக்கப்பட்டார்கள்.
இந்த அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமான ரியல் அட்மிரல் ஆனந்த பீரிஸ் இந்த முன்னாள் எல். ரி. ரி. ஈ. இயக்கத்தின் அங் கத்தவர்களான ஆண்களையும், பெண்களையும் சிவில் பாதுகாப் புத் திணைக்களத்தின் படையணியில் மனமுவந்து சேர்த்துக் கொண்டார்.
இந்த இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் மறுவாழ்வு அளித்து அவர்களின் வாழ்க்கையில் ஒளியைப் பரப் பும் பணியை விஸ்வமடுவில் அமைந்துள்ள படையணியின் தலைமை அலுவலகத்தில் அதிகாரியாக இருக்கும் கேணல் டபிள்யூ. டபிள்யூ. ரத்னபிரியவும் அவரது உதவியாளரான மேஜர் ரஞ்ஜித் மல்லவராச்சியும் சிறப்பாக நிறைவேற்றுகின்றார்கள்.
ஆயுதம் தாங்கி அரசாங்கப் படைகளை எதிர்த்துப் போராடிய இந்த முன்னாள் எல். ரி. ரி. ஈ. இயக்கத்தின் அங்கத்தவர்கள், இன்று துப்பாக்கிகளைத் தூக்கி எறிந்துவிட்டு மண்வெட்டியும் கையுமாக (இப்படையணிக்குப் பொறுப்பாக இருக்கும்) 12 பண்ணைகளில் நெற்சாகுபடியுடன் சோளம், நிலக்கடலை, மரவள்ளி, கஜு போன்ற வற்றை செய்கை பண்ணுவதில் ஈடுபட்டுள்ளார்கள்.
இந்த சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் படையணியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற 3,500 இளைஞர்களுக்கும் இளம் பெண்களுக்கும் வேலை வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. இவர் கள் ஒவ்வொருவருக்கும் 23 ஆயிரம் ரூபா சம்பளமாகக் கொடுக் கப்படுகின்றது. ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி யத்திலும் இவர்கள் அங்கத்தவர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி அவர்களின் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அமைச் சரவைத் தீர்மானம் ஒன்றுக்கும் விரைவில் அனுமதி கிடைத்த வுடன் இவர்கள் அனைவரும் அரச சேவையில் சேர்த்துக் கொள்ளப்பட்டு ஓய்வூதியத்தை பெறும் வாய்ப்பையும் பெறு வார்கள். கேணல் டபிள்யூ. டபிள்யூ. ரத்னபிரிய தலைமையில் இவ்விளைஞர்கள் யுவதிகளுக்கென விசேட கலை, இலக்கிய துறையுடன் சம்பந்தப்பட்ட சகல நிகழ்வுகளிலும் விசேட பயிற்சி யும் அளிக்கப்பட்டு வருகின்றது.
இங்குள்ள ஆண், பெண் உத்தி யோகத்தர்களில் பலர் நல்ல குரல் வளம் கொண்டவர்கள் என்ப தால் கர்நாடக இசையிலும் மெல்லிசைப்பாடல்களிலும் மேடைக் கச்சேரிகளை நடத்தக்கூடிய அளவுக்கு திறமை மிக்கவர்களாக இருக்கிறார்கள். இவர்களில் ஆண்களும் பெண்களும் பரதநாட் டியம் மற்றும் சாதாரண நாட்டியம் ஆடும் திறமை மிக்கவர் களாகவும் இருக்கின்றார்கள்.
இந்தப் படையணியில் எல். ரி. ரி. ஈ. யினால் பாதிப்புக்குள்ளான குடும்பங்களைச் சேர்ந்த கைம்பெண் களும் இங்கு சேவை ஆற்றி தங்கள் சிறுபிள்ளைகளையும் கைக்குழந்தைகளையும் இந்தச் சம்பளத்தின் மூலம் காப்பாற்றி வருகின்றார்கள்.
இங்கு கைக்குழந்தைகளுடனும் சிறு பிள்ளைகளுடனும் பணிக்கு வரும் பெண் உத்தியோகத்தர்களின் பிள்ளைகளை பராமரிப்ப தற்காக விசேட பராமரிப்புப் பிரிவுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில், இந்தப் படையணியைச் சேர்ந்த பெண் உத்தியோகத் தர்கள் பிள்ளைகள் பராமரிக்கும் பொறுப்பை சிறப்பாக நடத்தி வருகின்றார்கள்.
இந்தப் பிரதேசத்தில் கேணல் ரத்னபிரியவும் அவரது உதவியாளர் ரஞ்சித் மல்லவராச்சியும் 250 பாலர் பாடசாலைகளையும் ஆரம்பித்து நடத்துகின்றார்கள். இப்பாலர் பாடசாலைகளில் 450 படையணி உத்தியோகத்தர்கள் ஆசிரியர் களாகப் பணிபுரிகின்றார்கள். 12 மணியுடன் பாலர் பாடசாலைகள் மூடப்பட்டதும் இந்த ஆசிரியர்கள் தங்கள் சக ஊழியர்களின் பிள்ளைகளுக்கும் மாலைப்பொழுதில் விசேட ரியூசன் வகுப் புக்களை இலவசமாக நடத்தவும் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
இத்தகைய பெரும் சமூகப் பணிகளையும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் படையணியினர் செய்வதனால் வடபகுதியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு நிம்மதியாக வாழ்வதற்கு மாதாந்த வருமானம் இப்போது கிடைத்துள்ளது. இவர் களில், பலர் நாம் தெரியாத்தனமாக எல். ரி. ரி. ஈ.யினரின் போலிப் பிரசாரங்களை நம்பி ஏமாந்து போய் வாழ்க்கையைச் சீர்குலைத் துக்கொண்டோம். ஆயினும் தெய்வாதீனமாக தேசத்தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் எல். ரி. ரி. ஈ. இயக்கத்தை அழித்து எங்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை பெற்றுக்கொடுத்துள்ளார் என்று கண்ணீர் மல்க நன்றி தெரிவிக்கிறார்கள்.
சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் படையணி மூலம் வடபகுதியில் உள்ள வேலையற்ற இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் வாழ்வா தாரத்தை தொடர்ந்தும் பெற்றுக்கொடுப்பதற்கும் அதனை விஸ் தரிப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

No comments:
Post a Comment