Pages

Friday, March 8, 2013

இலங்கை பிரச்னை தொடர்பாக மதுரையில் காங்., நிர்வாகிகள் வீடுகளுக்கு பாதுகாப்பு!

Friday, March 08, 2013
மதுரை::இலங்கை பிரச்னை தொடர்பாக, மதுரையில் உள்ள காங்., நிர்வாகிகள் வீடு, அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கு எதிராக, தமிழ் அமைப்புகளின் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. நேற்று முன் தினம், மதுரை காளவாசலில் உள்ள, "மிகின் லங்கா' விமான நிறுவனத்தின், டிக்கெட் அலுவலகம் மீது, நாம் தமிழர் இயக்கத்தினர் தாக்குதல் நடத்தினர். இலங்கை பிரச்னை குறித்து கருத்து தெரிவித்த, ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமியின் மதுரை அலுவலகம் மீது, சட்டக்கல்லூரி மாணவர்கள் தாக்குதல் நடத்தினர். இந்நிலையில், மதுரையில் உள்ள காங்., நிர்வாகிகள் வீடுகள், அலுவலகம் தாக்கப்படலாம் என, உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதைதொடர்ந்து, காமராஜர் ரோட்டில் உள்ள கட்சி அலுவலகம் மற்றும் நகர் தலைவர் தெய்வநாயகம், முன்னாள் எம்.பி., ராம்பாபு உட்பட, கட்சி நிர்வாகிகளின் வீடுகளுக்கு எஸ்.ஐ., தலைமையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment