Pages

Friday, March 8, 2013

ஐ.நா., அலுவலகங்களில் மது அருந்த தடை

Friday, March 08, 2013
நியூயார்க்:.ஐக்கிய நாடுகள் சபை அலுவலகங்களில் மது அருந்த, தடை விதிக்கப்பட்டுள்ளது.பல நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள், பேச்சுவார்த்தை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, நியூயார்க்கில் உள்ள, ஐக்கிய நாடுகள் சபை அலுவலகங்களில் நடக்கும் கூட்டங்களில், கலந்துகொள்கின்றனர்.இரவு நேரங்களில் நடக்கும் கூட்டங்களில், கலந்து கொள்பவர்கள், அளவுக்கு மீறி மது அருந்துவதாக, எழுந்த புகாரின் காரணமாக, "ஐ.நா., அலுவலக கட்டிடங்களில், மது அருந்த வேண்டாம்' என, சீர்திருத்த விவகாரங்களுக்கான ஐ.நா., தூதர், ஜோசப் டோர்செல்லா, கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

இரவு நேர கூட்டங்கள், குறிப்பாக கிறிஸ்துமஸ் பண்டிகைகால, வரவுசெலவு திட்டம் தொடர்பான, ஐ.நா., வின், கமிட்டி கூட்டங்களின் போது, உறுப்பினர்கள், அதிக அளவில், மது அருந்துவதாக தெரியவருகிறது.ஏற்கனவே, உறுப்பினர்களுக்கான மதுபான அறை ஒன்று உள்ளது. இதை தவிர இன்னும் சில இடங்களிலும், உறுப்பினர்கள் மது அருந்துகின்றனர்.சில உறுப்பினர்கள், வெளியில் இருந்தும், மது பாட்டில்களை, அலுவலக வளாகத்துக்கு, எடுத்து வருகின்றனர்.ஐ.நா., சபையின் செயல்பாடுகளில் உறுப்பினர்கள் கவனம் செலுத்த வேண்டும். சபையின் நடவடிக்கைகளில் கிடைக்கும், வெற்றியை கொண்டாட, கொஞ்சம் மதுவை, மிச்சம் வைப்போம்.இவ்வாறு, டோர்செல்லா கூறினார்.ஏற்கனவே, ஐ.நா., அலுவலகங்களில், புகைபிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment