Pages

Thursday, March 28, 2013

புலிகளுக்கு ஆதரவு தெரிவித்த பிரித்தானிய பா.உ டேவிட் மிலிபான்ட் அரசியலில் இருந்து விலகல்!

Thursday, March 28, 2013
லண்டன்::புலிகளுக்கு ஆதரவு தெரிவித்த பிரித்தானிய பா.உ டேவிட் மிலிபான்ட் அரசியலில் இருந்து விலகல்!

புலிகளுக்கு தொடர்ச்சியாக ஆதரவை வெளிப்படுத்தி வந்த பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் மெலிபான்ட் அரசியலில் இருந்து ஒதுங்கிறார்.இதன் அடிப்படையில் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அவர் இராஜினாமா செய்திருப்பதாக தெரிக்கப்படுகிறது.
 
அவர் அமெரிக்காவில் இயங்களும் சமூக விடுதலை குழுவுடன் இணைந்து செயற்படவிருப்பதாகவும், இதற்காக பிரித்தானியாவை விட்டு வெளியேறவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் பிரதமர் பதவியில் இருந்தும், தொழில் கட்சியின் தலைமை பதவியில் இருந்தும் தமது சகோதரரான டேவிட் கெமரோனின் வருகையின் பின்னர் நீக்கப்பட்டார்.

இவ்வாறான நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னதாகவே அவர் பிரித்தானியாவின் அரசியல் செயற்பாட்டில் இருந்து விலகி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

டேவிட் மிலிபான்ட் இலங்கை விடயத்தில் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்த அதிக அளவில் செயற்பட்ட  அரசியல் தலைவர் ஆவார்.

இலங்கையில் புலிகளுக்காக
இறுதி யுத்தத்தை நிறுத்துமாறு கோரிய முக்கிய அரசியல் தலைவர்களில் அவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment