Pages

Thursday, March 28, 2013

வடக்கில் மூவாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக ஜெனிவா மனித உரிமை பேரவைக்கு, அரசசார்பற்ற நிறுவனங்கள் பொய்யான அறிக்கை:திவயின!

Thursday, March 28, 2013
இலங்கை::வடக்கில் மூவாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக ஜெனிவா மனித உரிமை பேரவைக்கு, அரசசார்பற்ற நிறுவனங்கள் பொய்யான அறிக்கையை சமர்பித்துள்ளதாக திவயின தெரிவித்துள்ளது. எனினும் காணாமல் போனவர்கள் குறித்து காவற்துறையில் முறைப்பாடுகள் செய்யப்படவில்லை.

இந்த பொய்யான அறிக்கையை சமர்பித்தவர்களை பாதுகாப்பு தரப்பினர் அடையாளம் கண்டுள்ளனர். இவர்கள் சிவில் அமைப்பு என்ற போர்வையில் இவ்வாறு பொய்யான அறிக்கையை சமர்பித்துள்ளதுடன், தாம் முன்வைத்த யோசனைகளில் எவற்றையும் அமெரிக்கா தனது யோசனையில் சேர்க்காதது குறித்து, இந்த அமைப்புகள் அமெரிக்க அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தியுள்ளதாகவும் திவயின தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment