Monday, March 18, 2013
இலங்கை::வடக்கு கிழக்கின் சனத்தொகைப் பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சித்து வருவதாக தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. சர்வதேச சமூகத்தினால் எழுப்பப்படும் கேள்விகளுக்கு அரசாங்கம் யதார்த்தமான முறையில் பதிலளிக்கத் தவறியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் கால அவகாசம் கோரி வருகின்ற போதிலும் அதன் பின்னணியில் அரசாங்கத்தின் சுயலாப நோக்கங்கள் மறைந்திருப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். வடக்கு கிழக்கின் சனத்தொகைப் பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாக அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தின் பின்னரான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் திருப்தி அடையக் கூடிய வகையில் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்த நிறைவின் மூலம் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தக் கிட்டிய சந்தர்ப்பத்தை அரசாங்கம் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பில் அராசங்கம் மெய்யான அர்ப்பணிப்புடன் செயற்படத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.



No comments:
Post a Comment