Pages

Monday, March 18, 2013

இரண்டு முறை திருத்தப்பட்ட இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் யோசனை எதிர்வரும் 21 ஆம் திகதி ஜெனிவா மனித உரிமை பேரவையில் சமர்பிக்கப்பட உள்ளது!

Monday, March 18, 2013
இலங்கை::இரண்டு முறை திருத்தப்பட்ட இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் யோசனை எதிர்வரும் 21 ஆம் திகதி ஜெனிவா மனித உரிமை பேரவையில் சமர்பிக்கப்பட உள்ளது.

இந்த யோசனை தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடலின் போது, கியூபா தூதுவர் பலமாக மேசையில் தட்டி யோசனைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். கியூபாவுடன் இணைந்து, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, இந்தோனேசியா ஆகிய நாடுகளும் யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதற்கு பதிலளிக்க கனேடிய தூதுவர் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது. இந்த யோசனை தொடர்பாக தம்முடன் அணைந்து கூட்டு யோசனையாக பேரவையில் சமர்பிக்க வேண்டும் என்ற தூதுவர் ஐலின் டோனஹோர் முன்வைத்த யோசனையை இலங்கை முற்றாக நிராகரித்துள்ளது.

அதேவேளை இலங்கைக்கு எதிரான இந்த யோசனை கடுமையான நிலைப்பாடுகளுடன் சமர்பிக்கப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடா ஆகிய தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment