Thursday, March 7, 2013

சன் சீ கப்பல் புகலிடக் கோரிக்கையாளர்களில் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் உள்ளடக்கம்!

Thursday, March 07, 2013
கனடா::சன் சீ கப்பல் மூலம் கனடாவிற்குள் பிரவேசித்த புகலிடக் கோரிக்கையாளர்களில் பயங்கரவாத மற்றும் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களும் அடங்குவதாக கனேடிய நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குறித்த இலங்கையர்கள தொடர்பில் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் பின்னர், விசாரணைகளை நடாத்திய நீதவான் ஒருவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 2010 ஆம் ஆண்டு சன் சீ கப்பல் மூலம் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் கனடாவை சென்றடைந்திருந்தனர்.

பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் மற்றும் குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்புவதற்காக கனடாவிற்கு அரசியல் புகலிடம் கோரியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொருளாதார பயன்களை பெற்றுக் கொள்வதற்காகவே புகலிடக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

No comments:

Post a Comment