Thursday, March 7, 2013

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை இராணுவத்தின் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படை அற்றது - சரத்பொன்சேகா!

Thursday, March 07, 2013
இலங்கை::மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை இராணுவத்தின் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாக ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்பில் சில அமைப்புக்கள் வெளியிடும் கருத்துக்கள் அடிப்படை அற்றது எனவும் அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே இலங்கை இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டவர்களை உடல் ரீதியான சித்திரவதை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக மனித உரிமை கண்காணிப்பகத்தினால் குற்றம் சுமத்தப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டது.

இதனை அரசாங்கமும் உடன் மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் முன்னாள் இராணுவ தளபதி என்ற வகையில் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை தாமும் நிராகரிக்கதாக பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்...

சரணடைந்த பெண் மற்றும் ஆண்  புலி போராளிகள் மீது பாலியல் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை எனவும், இவற்றை வெறும் பொய்களாகவே கருத வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருவதாகவும் அவற்றை காத்திரமான முறையில் முறியடிக்க அரசாங்கம் தவறியுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அரசாங்கத்தின் இந்த மெத்தனப் போக்கு சர்வதேச அரங்கில் இலங்கை தனிமைப்படுத்தப்படக் கூடிய அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளாது ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையுடனான சந்திப்பை இலங்பை; பிரதிநிதிகள் தவிர்த்துக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் முக்கிய நாடுகள் இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு நடத்தப்படுவதனை எதிர்த்து வருவதாகத் தெரிவித்துள்ளார். இராணுவத்தினர் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் சீரிய ஒழுக்கத்துடன் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment