Pages

Tuesday, March 19, 2013

இலங்கை தொடர்பான அமெரிக்காவின் இறுதி வரைவு திருத்தங்களுடன் சமர்ப்பித்துள்ளது!

Tuesday, March 19, 2013
ஜெனிவா::இலங்கை தொடர்பான அமெரிக்காவின் இறுதி வரைவு திருத்தங்களுடன் சமர்ப்பித்துள்ளது.இதன்படி ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிகளுக்கு முன்அனுமதி இன்றி இலங்கை வருவதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும் என்ற விடயம் நிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அத்துடன், போர்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் என்ற விடையத்தையும் அமெரிக்கா நீக்கியுள்ளது.இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் பிரேரணை நேற்று சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவருவது உறுதி என அமெரிக்கா தெரிவித்துள்ளது!

ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவருவது உறுதி என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நுலாண்ட் செய்தியாளர்களிடம் தெரிவித்திருப்பதாவது,

ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவருவது உறுதி. எங்களது இந்த முடிவு இலங்கை அரசை அதிர்ச்சிக்குள்ளாக்காது. ஏனெனில், இதுபற்றி வெளிப்படையாக ஏற்கெனவே அவர்களுக்கு தெரிவித்து விட்டோம்.

முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டனை இலங்கை வெளியுறவு அமைச்சர் கடந்த ஆண்டு சந்தித்துப் பேசினார். அப்போது, போரால் பாதிக்கப்பட்ட பகுதியில் மறுவாழ்வுப் பணிகளை விரைந்து மேற்கொள்ளாவிட்டால், ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்படும் என கூறியிருந்தோம். அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. எனவேதான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனறும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment