Pages

Tuesday, March 19, 2013

தமிழகத்தில் இலங்கையர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிராக மத்திய மாகாண சபையில் கண்டன தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது!

Tuesday, March 19, 2013
இலங்கை::தமிழகத்தில் இலங்கையர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிராக மத்திய மாகாண சபையில் கண்டன தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று திங்கட்கிழமை கண்டியைச் சேர்ந்த பௌத்த பிக்கு ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தே மத்திய மாகாண சபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மத்திய மாகாண சபையின் மாதாந்த கூட்டம் பதில் தலைவர் ஏ.ஜீ. சிறிசேன தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை உறுப்பினரான லக்கி ஜயவர்தனஇ சென்னையிலும் தஞ்சாவூரிலும் பௌத்த பிக்குகள் தாக்கப்பட்ட சம்பவங்கள் கவலையையும் வேதனையையும் அளிப்பதாக குறிப்பிட்டார்.

அத்துடன் 1983 இல் இடம்பெற்ற சம்பவத்தை இது நினைவுபடுத்துவதாகவும் தெரிவித்த லக்கி ஜயவர்தனஇ மத்திய மாகாண சபை இந்த சம்பவங்களை வன்மையாக கண்டிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதேவேளைஇ மத்திய மாகாணத்தில் சகல இன மக்களும் ஒற்றுமையுடன் வாழும் சூழ்நிலையில் தமிழகத்தில் பிக்குகள் தாக்கப்பட்ட சம்பவம் கவலையளிப்பதாக மாகாண தமிழ் கல்வி அமைச்சர் அனுஷியா சிவராஜா தெரிவித்தார்.

அண்மையில் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான்இ தமிழகம் சென்றிருந்தபோது அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர்இ இலங்கையிலிருந்து இந்தியா செல்கின்ற மக்கள் மிக நிதானத்துடன் செயற்பட வேண்டும் என்பதுடன் அவர்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இதேபோன்று மத்திய மாகாண சபை உறுப்பினர்களான லாபிர் ஹாஜியார்இ ஏ.பீ.ரத்னாயக்கஇ எம்.ஜி.ஜயரட்னஇ எஸ்.சதாசிவம் உட்பட பல மாகாண சபை உறுப்பினர்கள் பிக்குகள் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து சபையில் உரையாற்றினர்.

இந்த நிலையில்இ தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனத்தை தெரிவித்து இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கு தீர்மானம் சமர்பிக்கும் வகையில் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

No comments:

Post a Comment