Wednesday, March 13, 2013
சென்னை::சென்னை புழல் சிறையில் உள்ள ரவுடிகள் கைதிகள் இலங்கைக்கு எதிரான ஐ.நா., கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
ஐ.நா., கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி புழல் சிறையில் உள்ள கைதிகள் 23 பேர் இந்த உண்ணாவிரத்தை மேற்கொண்டு வருகின்றனர்....
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க கோரி காரைக்குடியில் வக்கீல்கள் இன்று உண்ணாவிரதம்: மாணவர்கள் போராட்டம் 3-வது நாளாக நீடிப்பு!
காரைக்குடி::இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள், தமிழகம் முழுவதும் போராட்டத்தில் இறங்கி உள்ளன.
காரைக்குடியில், வக்கீல்கள் சங்கம் சார்பில் இதே கோரிக்கையை வலியுறுத்தி இன்று (புதன்கிழமை) ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. கோர்ட்டு முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு வக்கீல் சங்க தலைவர் ரமணன் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் பஞ்சு, வக்கீல்கள் முருகானந்தம், இளங்கோ, பிரகாஷ், கமல் தயாளன் உள்பட பலர் இதில் பங்கேற்றனர்.
காரைக்குடி அரசு கலைக் கல்லூரி முன்பு மாணவர்கள் நடத்திவரும் உண்ணாவிரதப் போராட்டம் இன்று 3-வது நாளாக நீடித்தது. சென்னை லயோலா கல்லூரி மாணவர் காரல் மார்க்ஸ், அழகப்பா கலைக்கல்லூரி மாணவர் விக்னேஷ், அழகப்பா பல் கலைக்கழக மாணவர்கள் சுரேந்திரங், பிரதீப் உள்பட 5 பேர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:
Post a Comment