Pages

Tuesday, March 5, 2013

நவநீதம் பிள்ளை - சந்திக்க அவசியமில்லை - அமைச்சர் மஹிந்த சமரசிங்ஹ!

Tuesday, March 05, 2013
இலங்கை::ஜெனீவா மனித உரிமை மாநாட்டில் கலந்து கொள்ளும் இலங்கை தூதுக்குழுவின் பிரதானியான அமைச்சர் மஹிந்த சமரசிங்ஹ, தம்முடன் கலந்துரையாட வேண்டும் என மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை ஊடகங்கள் வாயிலாக அழைப்பு விடுத்திருந்தார்.

இந்தநிலையில், அவர் தமது ஆரம்ப உரை முதல் நேற்றைய தினம் ஆற்றிய உரை வரை இலங்கை தொடர்பாக கருத்து வெளியிட்டிருந்தார்.

எவ்வாறாயினும், மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையை சந்திப்பதற்கான எந்தவித அவசியமும் தமக்கில்லை என அமைச்சர் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அவருடன் உரையாட வேண்டிய சகல விடயங்களையும் தமது உரையில் குறிப்பிட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment