Pages

Thursday, March 14, 2013

தற்கொலை போராளிகளுக்கு புனர்வாழ்வளித்த முதல் நாடு இலங்கை - ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் வதிவிடப்பிரிதிநிதி பாலித்த கோஹன்ன!

Thursday, March 14, 2013
இலங்கை::தற்கொலை போராளிகளுக்கு புனர்வாழ்வளித்த முதல் நாடு இலங்கையே என்று, ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் வதிவிடப்பிரிதிநிதி பாலித்த கோஹன்ன தெரிவித்துள்ளார்.

ஏசியன் ட்ரிபியுன் இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தம் அதிர்ஸ்டவசமாக நான்கு வருடங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது.

இதன்போது சரணடைந்த தற்கொலை போராளிகளுக்கும், இலங்கை அரசாங்கம் புனர்வாழ்வளித்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

 புலிகளால் 230க்கம் அதிகமான தற்கொலை தாக்கதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை சரணடைந்த புலிகளில் பெரும்பாலானோர் புனர்வாழ்வளிப்பின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment