Tuesday, March 05, 2013
ஜெனிவாஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டம் ஜெனிவாவில் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் இலங்கையில் இறுதிகட்ட போரின்போது நடந்த போர் குற்றம் குறித்து அமெரிக்கா தீர்மானம் கொண்டுவர உள்ளது. இந்த தீர்மானம் இன்று தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க தீர்மானத்தில் என்னென்ன தகவல்கள் இடம் பெற்றுள்ளன என்ற விவரம் கிடைத்துள்ளது. அவை வருமாறு:-
* இலங்கையில் நல்லிணக்க ஆணை குழு பரிந்துரையை விரைவாக செயல்படுத்த வேண்டும்.
* இலங்கையில் அனைத்து மக்களுக்கும் நீதி, சமத்துவம், நல்லிணக்கம் ஆகியவற்றை உறுதிப்படுத்த சட்டரீதியான நடைமுறைகளை உருவாக்க வேண்டும்.
* மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா.வின் சிறப்பு அதிகாரிகள் குழு இலங்கையில் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு அந்த நாட்டு அரசு அனுமதிக்க வேண்டும். இந்த விஷயத்தில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் அல்லது அவருக்கு இணையான பொறுப்பில் உள்ள அதிகாரிகள் இலங்கை அரசின் ஒப்புதல் பெற்று அந்த நாட்டுக்கு உதவி செய்ய வேண்டும்.
* இலங்கையில் சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டிருப்பது தொடர்பாக அந்த நாட்டு அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து ஐ.நா. மனித உரிமை குழு ஆணையர் அடுத்த ஐ.நா. மனித உரிமை கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
மேற்கண்ட முக்கிய தீர்மானங்கள் அதில் இடம் பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

No comments:
Post a Comment