Saturday, March 9, 2013

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஜப்பான் விஜயம்!

Saturday, March 09, 2013
இலங்கை::ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஜப்பானுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

எதிர்வரும் 13ம் திகதி முதல் 18ம் திகதி வரையில் இந்த விஜயம் இடம்பெறவிருப்பதாக அவரது ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் ராஜதந்திர உறவுகளை விரிவுப் படுத்தும் வகையில் ஜனாதிபதியின் இந்த விஜயம் அமையவுள்ளது.

ஏற்கனவே ஜப்பான் இலங்கைக்கு பல்வேறு விடயங்களில் ஒத்துழைப்பு வழங்கி வருகிறது.

தற்போது இலங்கைக்கு நிதி உதவி வழங்கும் நாடுகளில் ஜப்பானும் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment