Thursday, March 28, 2013
சென்னை::இலங்கையில் தனி ஈழம் அமையாது - நாராயணசாமி நாசூக்கு: புலிகளின் ஆதரவாளர்களுக்கு அதிர்சி!
தமிழக சட்டசபையில் இலங்கைக்கு எதிராக மத்திய அரசை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து, மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி பேசிய போது, தனி ஈழ விவகாரத்தை காஷ்மீருடன் ஒப்பிட்டுப் பேசினார்.
தமிழக மாணவர்களின் முதன்மையான கோரிக்கையான தனி ஈழம் போல், பாகிஸ்தானும் காஷ்மீர் மாநிலத்தை தனியாக பிரித்துக் கொடுக்க வலியுறுத்தினால் நிலைமை என்னவாகும்? எனவும், காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக ஐநா சபையில் தீர்மானம் கொண்டு வந்தால் இந்தியா அதை ஏற்றுக்கொள்ளுமா? என்றும் கேள்விகள் எழுப்பினார்.
நேற்று புதுச்சேரியில் செய்தியாளர்கள் கேட்டதற்கு இவ்வாறு பதிலலித்தார். மேலும், இலங்கை தூதர் கரியவாசம், தனது அதிகாரத்திற்குட்பட்டு பேச வேண்டும் எனவும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment