Pages

Thursday, March 28, 2013

பதிவு செய்யப்பட்ட நான்கு புலிகள் ஆதரவு அரசியல் கட்சிகள் ஏற்றுக் கொள்ளப்பட்டவை என நிரூபிக்கப்படாததால் இரத்து!

Thursday, March 28, 2013
இலங்கை::பதிவு செய்யப்பட்ட நான்கு புலிகள் ஆதரவு அரசியல் கட்சிகள் ஏற்றுக் கொள்ளப்பட்டவை என நிரூபிக்கப்படாததால் இரத்து!
  பதிவு செய்யப்பட்ட நான்கு புலிகள் ஆதரவு அரசியல் கட்சிகள் ஏற்றுக் கொள்ளப்பட்டவை என நிரூபிக்கப்படாததால் அவை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ENDLF), தேசிய ஒற்றுமை முன்னணி (NUA), விடுதலை புலிகள் மக்கள் முன்னணி (PFLT) மற்றும் ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (UNAF) போன்ற கட்சிகளே இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மாடு, கேட், புலி, புறா என்பன இக்கட்சிகளின் சின்னமாக விளங்கியதென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.

கடந்த ஜனவரி 21ம் திகதி தொடக்கம் ஐக்கிய தேசிய மாற்று முன்னணியும் ஜனவரி 31ம் திகதி தொடக்கம் ஏனைய கட்சிகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த

 தேசப்பிரிய அத தெரணவிடம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment