Thursday, March 07, 2013
திராவிட முன்னேற்ற கழகத்தின் பொய்யான பிரசாரத்தை செனல் 4 தொலைக்காட்சியின் பணிப்பாளரும், இலங்கையின் கொலைக்களம் காணொளியின் தயாரிப்பாளருமான கெல்லம் மெக்ரே நிராகரித்தார்.
இலங்கை தமிழர்களின் விடயத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்காக, அதன் உப தலைவர் மு.க.ஸ்டாலினை, சனல் 4 தொலைக்காட்சியின் பணிப்பாளர் கெல்லம் மெக்ரே பாராட்டியதாக, திராவிட முன்னேற்ற கழகம் பிரசாரம் செய்துவந்தது.
இந்தநிலையில், இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கெல்லம் மெக்ரே, எல்லா நன்மனம் படைத்தவர்களும், இலங்கை தமிழர்களுக்கான நீதியும், நியாயும் கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.
இதற்காக தாம் தனிப்பட்ட எந்த கட்சியையும் பாராட்டவில்லை என்றும் கெல்லம் மெக்ரே குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment