Sunday, March 10, 2013

இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணையால் இந்தியாவிற்கும் அழுத்தம் ஏற்படாலம் - மனித உரிமைகள் ஆணைக்குழு!

Sunday, March 10, 2013
இலங்கை::ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணையில் இந்தியாவிற்கும் அழுத்தம் ஏற்படாலம் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தற்போது இராஜதந்திர மட்டத்தில் விநியோகிக்கப்பட்டுள்ள உத்தியோகபற்றற்ற வரைபின் 11 - 4 சரத்து தொடர்பில் இந்தியா கவனம் செலுத்தியுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் பிரதீபா மஹானாம தெரிவித்துள்ளார்.

இந்த பிரேரணை ஏதேனும் ஓர் வகையில் நிறைவேற்றப்படும் பட்சத்தில் காஷ்மீர் பிரச்சினை குறித்தும் இந்த சரத்தை தொடர்புபடுத்திக் கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விசேட செயற்பாடுகளின்போது இலங்கையுடன் இணக்கப்பாட்டினை ஏற்படுத்திக்கொண்டு செயற்படுவது தொடர்பில் அந்த சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத் தவிர குறிப்பிட்ட சில சந்தர்ப்பங்களில் சர்வதேச கண்காணிப்பாளர்களுக்கு எவ்வித கட்டுபாடுமின்றி நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும் எனவும் சரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் நீதிமன்ற சுயாதீனம், மொழி, சுதந்திரம், ஒன்றுகூடுவதற்கு உள்ள உரிமை, பெண்கள் உரிமைகள், காணாமற்போதல், கடத்தல் போன்ற விடயங்களில் பிரச்சினை ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களில் எவ்வித தடையும் இன்றி ஐ.நா பிரதிநிதிகள் நாட்டுக்குள் பிரவேசித்து ஆராய்வதற்கான சூழல் உருவாக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment