Pages

Monday, March 11, 2013

அமைச்சர் குர்ஷித் பேச்சு : கருணாநிதி கண்டனம்!

Monday, March 11, 2013
சென்னை::வெளியுறவுத் துறை அமைச்சர், சல்மான் குர்ஷித் பேச்சு, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்ட வேண்டிய, மத்திய அரசின் நடவடிக்கை, வேதனைத் தீயில் ஆழ்த்துபவையாக உள்ளன.வெளியுறவுத் துறை அமைச்சர், சல்மான் குர்ஷித் கூறுகையில், "ஜெனீவாவில் நடைபெறும், ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில், அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் குறித்து, அமெரிக்காவுடன், இலங்கை அரசு பேச்சு நடத்திய பின், அந்தத் தீர்மானத்தை ஆதரிப்பதா, வேண்டாமா என்பது குறித்து, மத்திய அரசு முடிவு செய்யும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், "அந்தத் தீர்மானம் தொடர்பாக, அமெரிக்காவுடன் பேச்சு நடத்தி, சுமுகத் தீர்வு எட்டும் வாய்ப்பை ஆராயும் படி, இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர், ஜி எல். பெரிஸைக் கேட்டுக் கொண்டுள்ளேன். அமெரிக்காவைத் தடுக்கும் வாய்ப்புகளை, இலங்கை அரசு ஆராய வேண்டும்; அதுவரை சம்பந்தப்பட்டவர்கள் காத்திருக்க வேண்டும்' என்றெல்லாம் கூறியிருப்பது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.நமது படை வரிசையில் முன் நின்று, நமக்காகப் போரிட வேண்டிய தளபதி, எதிரிப்படையின் முன் வரிசையில் நின்று, அவர்களுக்கு ஆலோசனைகளை வாரி வழங்குவதைப் போலத் தான், இந்த அமைச்சரின் பதில் அமைந்துள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.

No comments:

Post a Comment