Pages

Monday, March 11, 2013

புலிகளுக்காக நிதி சேகரித்தல் ஆயுதம் கொள்வனவு செய்தல் போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள கனேடியத் தமிழருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கையை கைவிடுமாறு அமெரிக்காவிடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை!

Monday, March 11, 2013
புலிகளுக்காக நிதி சேகரித்தல், ஆயுதம் கொள்வனவு செய்தல் போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள கனேடியத் தமிழருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கையை கைவிடுமாறு அமெரிக்காவிடம் இலங்கை அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தத் தகவலை கனடாவின் ´நெசனல் போஸ்ட் நாளேடு´ தெரிவித்துள்ளது.

சுரேஸ் சிறிஸ்கந்தராஜா என்ற கனேடியத் தமிழர் மீது தீவிரவாத குற்றச்சாட்டின் மீது மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகள் குறித்து கவலை தெரிவித்து, இலங்கை அரசாங்கம் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு அசாதாரணமான இந்த வேண்டுகோள் கடிதத்தை அனுப்பியுள்ளது.

கடந்த வாரம் சுரேஸ் சிறீஸ்கந்தராஜாவை பிணையில் விடுவிக்கக் கோரும் மனு நியூயோர்க் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோதே, அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை கைவிடக் கோரி அமெரிக்காவுக்கு இலங்கை எழுதிய கடிதம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

எனினும் இதனை அடிப்படையாக வைத்து சுரேஸ் சிறீஸ்கந்தராஜா சார்பில் கோரப்பட்ட பிணைக்கு நீதிபதி அனுமதி மறுத்து விட்டார்.

வோட்டர்லூ பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற சுரேஸ், விடுதலைப் புலிகளுக்காக அமெரிக்க வங்கிகள் ஊடாக 13 ஆயிரம் டொலர் நிதி சேகரித்ததாகவும், ரமணன் மயில்வாகனத்துடன் இணைந்து இரவுப்பார்வை கருவிகள், இலத்திரனியல் கருவிகள், நீர்மூழ்கி வடிவமைப்பு மென்பொருள்களை வாங்க முயன்றதாகவும் அமெரிக்க சட்டவாளர்களால் குற்றம்சாட்டப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment