Pages

Wednesday, March 13, 2013

வெலிக்கடை சிறைச்சாலையில் மூன்று கைதிகள் முன்னெடுத்துவரும் உணவுத் தவிர்ப்பு போராட்டம் நான்காவது நாளாகவும் தொடர்கிறது!

Wednesday, March 13, 2013
இலங்கை::வெலிக்கடை சிறைச்சாலையில் மூன்று கைதிகள் முன்னெடுத்துவரும் உணவுத் தவிர்ப்பு போராட்டம் நான்காவது நாளாகவும் தொடர்கிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட கைதியொருவர் தமக்கு விடுதலை அல்லது மரண தண்டனையை துரிதமாக நிறைவேற்றுமாறு வலியுறுத்தி சிறைச்சாலையின் கூரை மீதேறி தமது போராட்டத்தை ஆரம்பித்தார்.

அதன்பின்னர் திங்கட்கிழமை மேலும் இரண்டு மரண தண்டனை கைதிகள் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

ஒரு கைதி மாத்திரம் நேற்று கீழிறங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரும் போகம்பரை சிறைக்கைதிகள் சிலரும் இவ்வாறு தமது மரண தண்டனையை துரிதமாக நிறைவேற்றக் கோரி போராட்டம் நடத்தியிருந்தனர்.

இதனிடையே, வவுனியா சிறைச்சாலை புனரமைக்கப்பட்ட நிலையில் நேற்று அமைச்சர் சந்திரசிறி கஜதீர தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment