Wednesday, March 13, 2013
இலங்கை::சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயறன்றதாகக் கூறப்படும் 45 பேரை மாரவில பிரதேசத்தில் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மற்றும் நீர்கொழும்பைச் சேர்ந்தவர்களே நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும், இவர்களை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைப்பதற்காக சகல ஏற்பாடுகளையும் செய்ததாகக் கூறப்படும் ஒருவரையும் கைதுசெய்துள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை இன்று புதன்கிழமை மாரவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்

No comments:
Post a Comment