Tuesday, March 19, 2013

இலங்கைக்கு ஆதரவளிக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு இந்தியாவிற்கு காணப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்!

Tuesday, March 19, 2013
இலங்கை::இலங்கைக்கு ஆதரவளிக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு இந்தியாவிற்கு காணப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகின் அனைத்து நாடுகளும் இலங்கையை விமர்சனம் செய்யவில்லை எனவும், சில நாடுகள் யுத்தத்தின் பின்னரான அபிவிருத்தியை மெய்யாகவே பாராட்டி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் ஜப்பானுக்கு விஜயம் செய்திருந்த போது நாட்டில் இடம்பெற்றுள்ள அபிவிருத்தித் திட்டங்களை வரவேற்பதாக ஜப்பான் அறிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கின் அபிவிருத்திக்கு பாரியளவில் இந்தியா உதவிகளை வழங்கியுள்ளதாகவும், இலங்கைக்கு ஆதரவளிக்க வேண்டிய தார்மீகப் பொறுப்ப இந்தியாவிற்கு காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.யுத்தம் முடிவடைந்த போதிலும், யுத்தத்தை விதைத்த சிலரது நோக்கங்கள் பூர்த்தியாகாத காரணத்தினால் இலங்கைக்கு எதிராக போலிக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் புலிகளின் ஆதரவாளர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு இலங்கையை விமர்சனம் செய்து வருவதாகவும், இதற்கான ஆதாரங்கள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment