Pages

Tuesday, March 5, 2013

காஷ்மீரில், இந்திய ராணுவ வீரரர்கள், தலை துண்டித்து கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில், விளக்கம் அளிக்கும்படி, மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட், நோட்டீஸ்!

Tuesday, March 05, 2013
புதுடில்லி::காஷ்மீரில், இந்திய ராணுவ வீரரர்கள், தலை துண்டித்து கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில், விளக்கம் அளிக்கும்படி, மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட், நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இந்த ஜனவரியில், காஷ்மீரில், இந்தியா - பாக்., எல்லை பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த, இரண்டு இந்திய ராணுவ வீரர்கள் மீது, பாக்., ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். உயிரிழந்த ராணுவ வீரர்களின் தலைகளை துண்டித்த பாக்., வீரர்கள், அதில் ஒருவரின் தலையை, தங்களுடன், எடுத்துச் சென்றனர்.இந்த சம்பவம், நாடு முழுவதும், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, சர்வா மிட்டர் என்பவர், சுப்ரீம் கோர்ட்டில், ஒரு பொது நல மனுவை தாக்கல் செய்தார். அதில், அவர் கூறியிருந்ததாவது:இந்திய வீரர்கள், கொடூரமான முறையில், மனிதாபிமானமற்ற முறையில், பாக்., ராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளனர். இது, மிகப் பெரிய போர்க் குற்றம். பாக்., ராணுவத்தின் இந்த அட்டூழியத்துக்கு எதிராக, மத்திய அரசு, எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. பாக்., ராணுவத்துக்கு எதிராக, சர்வதேச கோர்ட்டில், வழக்கு தொடரும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.இந்த மனு, நீதிபதிகள், பி.எஸ்.சதாசிவம், ஜெ.எஸ்.கெல்ஹர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், "இந்த மனு தொடர்பாக, மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்' எனக்கூறி, நோட்டீஸ் அனுப்ப, உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment