Pages

Saturday, March 16, 2013

இலங்கை அதிபர் ராஜபக்சேவை கண்டித்து குடும்பத்தோடு உண்ணாவிரதம் ரசிகர் மன்றங்கள் அறிவிப்பு!

Saturday, March 16, 2013
சென்னை::இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க வலியுறுத்தி பெரம்பலூரில் வரும் 19ம் தேதி அனைத்து ரசிகர் மன்றத்தினர் சார்பில் உண்ணாவிரதம் நடைபெறுகிறது.

பெரம்பலூரில் நேற்று அனைத்து நடிகர் ரசிகர் நற்பணி மன்றங்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ரஜினி ரசிகர் நற்பணி மன்ற தலைவர் சண்முகதேவன் தலைமை வகித்தார். கமல் ரசிகர் நற்பணிமன்ற தலைவர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். விஜய் மன்றம் சார்பில் சிவக்குமார், அஜீத் மன்றத்தின் சந்தோஷ், சரத்குமார் மன்றத்தை சேர்ந்த சின்னசாமி, சூர்யா மன்றத்தின் சார்பில் சந்திரசேகர், கார்த்தி மன்றத்தின் பரிதி, சித்திக், விக்ரம் மன்றத்தின் இளையராஜா, அர்ஜூன் மன்றத்தின் செல்லதுரை, அதர்வா மன்றத்தின் கொளஞ்சியப்பன் மற்றும் நடிகர்கள் விஷால், பிரஷாந்த், தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி, ஜீவா, உதயநிதி ஸ்டாலின் சிவகார்த்திகேயன், பவர் ஸ்டார் சீனிவாசன் ஆகிய நடிகர் மன்றங்களின் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா மன்றத்தில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மேற்கு வானொலி திடலில் அனைத்து நடிகர் ரசிகர் நற்பணி மன்றங்களின் சார்பில் வருகிற 19ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்துவது. இதில் மன்ற உறுப்பினர்கள் தங்கள் குடும்பத்தினருடன் திரளாக பங்கேற்பது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment