Pages

Friday, March 8, 2013

.யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 ஆயிரம் துவிச்சக்கர வண்டிகள் விநியோகம் - யாழ். இந்திய துணைத்தூதரகம்!

Friday, March 08, 2013
இலங்கை::வடமாகாணத்தில் யுத்தத்தால் இடம்பெயர்ந்து மீள்குடியேற்றப்பட்டவர்களுக்கு 10 ஆயிரம் துவிச்சக்கர வண்டிகளை இந்திய அரசாங்கம் விநியோகித்துள்ளது.

இதற்கமைய முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கு தலா இரண்டாயிரத்து 500 துவிச்சக்கர வண்டிகளும் மன்னார், வவுனியா மாவட்டங்களுக்கு தலா ஆயிரத்து 750 துவிச்சக்கர வண்டிகளும் விநியோகிக்கப்பட்டதாக யாழ். இந்திய துணைத்தூதரகம் அறிவித்துள்ளது.

இதனைத் தவிர யாழ். மாவட்டத்தில் மீள்குடியேறிய மக்களின் நலன் கருதி இந்திய அரசாங்கம் ஆயிரத்து 500 துவிச்சக்கரவண்டிகளை விநியோகித்துள்ளது.

10 ஆயிரம் துவிச்சக்கர வண்டி விநியோக திட்டத்தை இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தபோது 2012 ஆம் ஆண்டு ஆரம்பித்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment